தன்னுடைய ஒவ்வொரு பாடலுக்கும் உலக அளவில் கோடிக்கணக்கான ஹிட்ஸ்களை அள்ளுபவர் பிரபல பாடகியான செலினா கோம்ஸ், இது ஒருபுறம் இருக்க இவர் வெளியிடும் புகைப்படங்களும் எப்படியும் மில்லியன் லைக்குகளை அள்ளி விடும்.
அந்த அளவிற்கு புகழ் பெற்ற இவருக்கு கிட்னியில் பிரச்சனை ஏற்பட்டு சமீபத்தில் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
இவருக்கு நெருங்கிய தோழியும் முன்னணி நடிகையுமான Francia Raisa கிட்னி கொடுத்து உதவி உள்ளார்.
இதனைப் பற்றி செலினா கோம்ஸ் அவரது இன்ஸ்டாகிராமில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார், இதனை பார்த்த பலரும் நட்பென்றால் இது அல்லவா என பாராட்டி வருகின்றனர்.