எந்தப் பல்கலைக்கழகத்தில் படித்தால் வேலைவாய்ப்புபெறுவது இலகு? தரவரிசைப் பட்டியல்

எந்தப் பல்கலைக்கழகத்தில் படித்தால் வேலைவாய்ப்பு பெறுவது இலகு என்பது தொடர்பில், QS Graduate Employability Rankings பட்டியலில், சிட்னி பல்கலைக்கழகம் உலகளவில் 4ம் இடம்பெற்றுள்ளது.

uni_1

பல்கலைக்கழக கல்வியின்போது வேலை செய்வதற்கேற்ற தகுதிகளை வளர்ப்பது, பல்கலைக்கழகத்தைவிட்டு வெளியேறிய பின்னர் விரைவாக வேலை கிடைத்தல் மற்றும் வேலை வழங்குநர்களுக்கு பல்கலைக்கழகத்தின்மீது இருக்கும் மதிப்பு போன்றவற்றை அடிப்படையாக வைத்து இப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி முதலிடத்தில் Stanford பல்கலைக்கழகமும் இரண்டாமிடத்தில் California பல்கலைக்கழகமும் காணப்படும் அதேநேரம் Harvard பல்கலைக்கழகம் மூன்றாமிடத்தில் காணப்படுகின்றது.

இதேவேளை மெல்பேர்ன் பல்கலைக்கழகம் 7ம் இடத்தையும், நியூசவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் 36வது இடத்தையும் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் 49வது இடத்தையும் பிடித்துள்ளன.

உலகளவில் 500 பல்கலைக்கழகங்கள் இத்தரப்படுத்தலில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.