இலங்கையில் கிடைத்த மிக்கப்பெரிய அதிஷ்டம்

ஸ்ரீலங்காவின் மேற்கு கடற்பரப்பில் அபாரமான அதிசயப் பொருள் ஒன்று கிடைத்துள்ளது. விலை மதிக்க முடியாத இந்தப் பொருளினால் மீனவர்கள் மிகப்பெரிய அதிஷ்டத்தை உணர்ந்திருக்கிறார்கள்.

sdc

புத்தளம் மாவட்டம் கற்பிட்டி கடலிலேயே இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. குறித்த பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் சீரற்ற கால நிலையின் காரணமாக ஒழுங்கான மீன்கள் கிடைக்காமல் தொழில் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தார்கள்.

கடலில் மீன்கள் அரிதாகவே பிடிபட்டதனால் கவலையோடு கரை திரும்பிக்கொண்டிருந்த மீனவர்களுக்கு திடீரென்று எங்கிருந்தோ துர் நாற்றம் வீசியது. கடலில் இவ்வாறான திடீர் நாற்றங்கள் அரிதானபடியால் குறித்த மீனவர்கள் அதைப்பற்றிய தேடலில் ஈடுபட்டுள்ளார்கள்.

sxd

இதன்போது கடலில் ஒருவித பொருள் மிதந்துகொண்டிருந்தது.  அதற்கு அருகில் சென்று பார்க்கும் போது அது “எம்பர்” (Ember) எனப்படும் திமிங்கலத்தின் வாந்தியாகும்.

கவலையோடு திரும்பிக்கொண்டிருந்த மக்களுக்கு எம்பர் கிடைத்தது மிகப்பெரிய அதிஸ்டமாகப்பட்டது. ஏனெனில் எம்பர் எனப்படும் திமிங்கிலத்தின் வாந்தியானது பல கோடி பெறுமதியானதாகும். ஒரு கிலோ எம்பர் கோடி ரூபா பெறுமதியானது எனச் சொல்லப்படுகிறது.

எம்பரின் பெறுமதித் தன்மை யாதெனில், இவற்றின் கூறுகளை பல மடங்குகளாகப் பிரித்து பெறுமதிமிக்க வாசனைத் திரவியங்களைச் செய்யமுடியும் என்பதேயாகும்.