வடகொரியா தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. வடகொரியாவின் இந்த செயல் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.
இதனால் வடகொரியா மீது கடுமையான தடைகள் விதிக்க வேண்டும் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. அந்த தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையை ஜப்பானை நோக்கி செய்தது.
வடகொரியாவின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு மட்டுமில்லாமல், நாட்டு மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி ஜப்பான் எச்சரிக்கை விடுத்தது.
இந்நிலையில் வடகொரியாவின் செயலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தென்கொரியா ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ளது.
கொரிய தீப கற்பத்தில் உள்ள கடல் பகுதியில் இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதாக தென்கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது