உலக நாடுகளுக்கு இணையாக இலங்கையும் தற்போது வளர்ச்சியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது.
பார்க்கும் இடமெங்கும் வானை முட்டும் உயர்ந்த கட்டடங்களுடன் அழகாக இலங்கை காணப்படுகிறது.
இந்நிலையில் 1973ம் ஆண்டில் இலங்கை எவ்வாறு காணப்பட்டது என்பது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
அந்தக் காலப்பகுதியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட வெளிநாட்டவர் ஒருவரினால் எடுக்கப்பட்ட புகைப்படங்களே தற்போது வெளியாகி உள்ளது.
இலங்கை பெருமைப்படுத்தும் வகையில் பல பகுதிகளில் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது.
ஸ்கொட்லாந்து நாட்டை சேர்ந்த டன்கன் என்பவரே இந்த புகைபடங்களை எடுத்துள்ளார்.
அவரின் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் சிறந்த சுற்றுலாத் தளங்களில் இலங்கையும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.