இலங்கையில் திடீரென அதிகரித்துள்ள பாலியல் நோய்! நோய்க்காரணி என்ன?

இலங்கையில் ஹெர்பிஸ் எனப்படும் பாலியல் நோய்த்தாக்கத்துக்கு உள்ளானோரின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு நிலை தோன்றியுள்ளதாக ஸ்ரீலங்காவின் எயிட்ஸ் மற்றும் பாலியல் நோய்கள் தொடர்பான தேசிய மருத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

59bcef6a5753d-IBCTAMIL

இதன்படி இந்த நோயினால் ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக குறித்த பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் சிசிர லியனகே கூறியுள்ளார்.

மேலும், இருபத்தைந்து வயதிற்கும் முப்பத்தைந்து வயதிற்கும் இடைப்பட்டவர்களே இந்த நோயினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், கடந்த வருடத்தில் மாத்திரம் இது சார்ந்த பால்வினை நோய்களுக்காக 38 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சைகளை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனிடல் ஹெர்பிஸ் என்பது, ஹெர்பிஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ்களான டைப்-1 (Herpes Simples Virus–type1 (HSV-1) மற்றும் டைப்-2 (Herpes Simples Virus–2 (HSV-2) எனப்படும் வைரஸ் நோய் கிருமிகளால் ஏற்படும் ஒரு பால்வினை நோயாகும்.

இது HSV-2 நோய்தொற்று உள்ள நபருடன் பாலியல் தொடர்பு வைத்துக்கொள்வதால் ஏற்படுகிறது. HSV-2 நோய்தொற்று உள்ள பெரும்பாலானோர் தங்களுக்கு இவ்வகை நோய்தொற்று ஏற்பட்டுள்ளது என்ற அறிகுறியின்றியே இருக்கிறார்கள்.

HSV-2 நோயினால் ஏற்படும் புண்கள் 2 முதல் 4 வாரங்களுக்குள் சுகமாகி விடும். நோயின் அறிகுறிகள் இல்லாதிருந்தாலும், அவை பாலுறுப்புகளின் மேலோ அல்லது அவற்றை சுற்றியோ அல்லது குதத்தை சுற்றியோ ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கொப்புளங்களாக தோன்றும். இந்த கொப்புளங்கள் உடைந்து புண்களை ஏற்படுத்தும். இப்புண்கள் முதல்முறை ஏற்படும்போது 2 முதல் 4 வாரங்களில் ஆறிவிடும்.

இந்த நோய் முதல் முறை ஏற்பட்ட பின், வாரங்கள் அல்லது மாதங்கள் கழித்து, முன்போலவே கொப்புளங்கள் ஏற்படும். ஆனாலும் முதன்முறை ஏற்பட்ட நோய் போல் பல நாட்கள் இது நீடிப்பதில்லை.

ஹெர்பிஸை குணப்படுத்த நவீன மருத்துவத்தில் சிகிச்சை கிடையாது. ஆனால் வைரஸை எதிர்க்கும் மருந்துகளை உட்கொள்ளும்போது, இந்நோயின் தாக்கத்தை குறைக்கலாம் அல்லது வருவதை தடுத்துக்காக்கிறது. ஆனால் இந்த மருந்துகளை தொடர்ந்தும் உள்ளெடுக்கும்போது பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன.