வானத்தில் தோன்றிய வருண பகவான்

இலங்கையில் பல இடங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. மழையின் கடவுள் பற்றி நாம் புராண சமய இதிகாசங்களில் படித்திருப்போம்.

ரிக்வேதத்தில் வருண பகவான் முக்கியமான தெய்வங்களில் ஒருவர், கடல், நீர்நிலைகள் மற்றும் மழைக்கு பொறுப்பான கடவுளே வருணன் என்ற நம்பிக்கை இந்துக்களிடம் நிலவுகிறது.

625.0.560.350.160.300.053.800.668.160.90 (4)

வருண பகவானின் மகன் தமிழ் முனிவரான அகஸ்தியர் என்பதால், வருணன் தமிழுக்கும் மிகவும் நெருக்கமானவர் எனலாம். தொல்காப்பியத்திலும் வருண பகவான் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்கள் மத்தியில் மழையின் கடவுள் பற்றிய நம்பிக்கைகள் காணப்படும் நிலையில், மழை மேகத்தில் தோன்றிய தெய்வத்தின் உருவத்தை ஒருவர் தனது செல்போன் கெமராவில் படம்பிடித்துள்ளார்.

கேகாலையில் வசித்து வரும் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிப்புரியும் அமில அத்துருசிங்க என்பவரே இந்த படத்தை பதிவு செய்துள்ளார். இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

625.0.560.350.160.300.053.800.668.160.90 (5)

கடந்த 12 ஆம் திகதி நான் பணிபுரியும் நிறுவனத்தில் இருந்து வெளியில் வரும் என்றும் இல்லாதவாறு வித்தியாசமான வெளிச்சம் பரவியிருந்ததை கண்டேன்.

இரவு நேர பணிக்கு வருபவர்களும் இந்த வித்தியாசமான வெளிச்சத்தை கண்டுள்ளதுடன் அங்கிருந்தவர்களிடம் கேட்டுள்ளனர்.

அலுவலகத்திற்கு வெளியில் இருக்கும் மின் விளக்குகளை மாற்றினீர்களா என அவர்கள் வினவியுள்ளனர்.

அது இயற்கையான வெளிச்சம் என்பதை அவர்களால் புரிந்துக்கொள்ள முடியவில்லை.

625.0.560.350.160.300.053.800.668.160.90 (6)

இந்த நிலையில், கேகாலையில் இருந்து புளத்கொவ்பிட்டிய வீதிக்கு வந்த போது, வானத்தில் தோன்றியிருந்த இருளில் மேகங்களுக்கு இடையில் மனித முகத்திற்கு இணையான முகம் தென்பட்டது. என்னால் நம்ப முடியவில்லை.

நான் உடனடியாக மூன்று படங்களை எடுத்தேன். படத்தை எடுத்து விட்டு பார்க்கும் போது மூன்று படங்களில் ஒரு படத்தில் மாத்திரமே மேகத்தில் தோன்றிய முகம் பதிவாகி இருந்தது. மற்றைய படங்களில் வானம் வழமை போல் காணப்பட்டது.
இதனையடுத்து படத்தை பெரியவர்களிடம் காட்டினேன். அவர்களில் ஒருவர் இது மழைக்கான தெய்வம் எனக் கூறியுள்ளார்.

இந்த தெய்வத்தின் கண் இமைகளில் இருந்தே மழைப் பெய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

625.0.560.350.160.300.053.800.668.160.90 (7)

எனது செல்போனில் பதிவான படத்தை போன்ற உருவத்தை பட்டங்களை பறக்கவிடும் சிறுவர்களும் கண்டுள்ளதுடன், அவர்களும் அதனை படம்பிடித்துள்ளனர்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் அவர்கள் பிடித்த படங்களில் ஒரு படத்தில் மாத்திரமே அந்த உருவம் பதிவாகியுள்ளது என அமில அத்துருசிங்க குறிப்பிட்டுள்ளார்.