அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வருகிற தீபாவளிக்கு ரிலீசாக இருக்கும் இப்படத்தில் விஜய் ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடித்திருக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், படத்தின் டீசர், டிரைலர் அறிவிப்பு குறித்து ரசிகர்கள் அதீத எதிர்பார்ப்பில் உள்ளனர். மேலும் டீசர் எப்போது வெளியாகும் என்று சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், மெர்சல் படத்தின் இசை மறுசீரமைப்பு வேலைகளை ஏ.ஆர்.ரகுமான் தொடங்கி இருக்கிறார். இதுஒருபுறம் இருக்க `மெர்சல்’ படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியிடப்பட உள்ளதாக ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் விளம்பர மேற்பார்வையாளரான அதிதி ரவீந்திரநாத் அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார்.
அதுமுதலே `மெர்சல்’ டீசர் என்ற ஹேஷ் டேக்குடன் விஜய் ரசிகர்கள் மெர்சல் படத்தை டிரெண்டாக்க தொடங்கி இருக்கின்றனர்.