தமிழ் சினிமா ஹாலிவுட் தரத்திற்கு உயர்ந்தாலும் சில விஷயங்களால் அடிபட்டுக் கொண்டு தான் இருக்கிறது. முக்கியமாக சொல்லப்போனால் திருட்டு DVD, பைரசி போன்ற விஷயங்கள் தமிழ் சினிமாவை அடிதளத்திற்கு கொண்டு செல்கிறது.
தயாரிப்பாளர் சங்க தலைவர் ஆனதும் விஷால் இதுபோன்ற விஷயங்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் விஷாலில் துப்பறிவாளன் படம் முதல் நாளிலேயே HDல் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியாக்கியிருந்தது. தற்போது சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது.
அதில் இனி விஷாலின் படங்கள் முதல் நாளே லீக் ஆகும் என்றும் விஜய்யின் மெர்சல் படமும் கண்டிப்பாக சமூக வலைதளத்தில் லீக் ஆகும் என்று ஒருவர் பேசியுள்ளார்.