இன்றைய ராசிபலன் (17/09/2017)

  • மேஷம்

    மேஷம்: முக்கிய பிரமுகர் களின் அறிமுகம் கிடைக்கும். விருந்தினர்களின் வருகை யால் வீடு களைக்கட்டும். தாய்வழி உறவினர்களுடன் மனத்தாங்கல் வரும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: மற்றவர்களை சார்ந் திருக்காமல் தன்னிச்சையாக செயல்படத் தொடங்குவீர்கள். பிள்ளைகளால் சமூக அந் தஸ்து உயரும். வெளிவட்டா ரத்தில் அந்தஸ்து உயரும். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் வேலை யாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பாதியில் நின்ற வேலைகள் உடனே முடியும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். அழகு, இளமை கூடும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.

  • கடகம்

    கடகம்: இன்றைய தினம் ராசிக்குள் சந்திரன் தொடர் வதால் புதிய முயற்சிகள் தள்ளி போய் முடியும். உறவினர், நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். மற்றவர்கள் பிரச்னையில் தலையிடுவதால் வீண் பழிச் சொல் ஏற்படக்கூடும். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத் தில் அதிரடி முடிவுகள் வேண்டாம். நேர் மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். சாலை களை கவனமாக கடந்து செல்லுங்கள். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். சிலர் உங்கள் வாயை கிளறிப் பார்ப்பார்கள். அசைவ, கார உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். போராடி வெல்லும் நாள்.

  • கன்னி

    கன்னி: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். பிரியமானவர் களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். வீரியத்தை விட காரியம் தான் முக்கியம் என்பதை உணருவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். புது திட்டங்கள் நிறைவேறும் நாள்.

  • துலாம்

    துலாம்: எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். பெற்றோ ரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வி.ஐ.பிகள் உதவுவார் கள். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். இனிமையான நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். தாழ்வு மனப்பான்மை நீங்கும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். புதியவரின் நட்பால் உற்சாக மடைவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

  • தனுசு

    தனுசு: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியா வசிய செலவுகள் அதிகரிக்கும். பிள்ளை களிடம் கோபத்தை காட்ட வேண்டாம். அநாவசியப் பேச்சை தவிர்ப்பது நல்லது. யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள்.

  • மகரம்

    மகரம்: எதையும் உற்சாகமாக செய்யத் தொடங்குவீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். மனைவி வழியில் ஆதரவுப் பெருகும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

  • கும்பம்

    கும்பம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். உங்களால் மற்றவர்கள் ஆதாய மடைவார்கள். விருந்தினர்களின் வருகை யால் வீடு களைக்கட்டும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். அமோகமான நாள்.

  • மீனம்

    மீனம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். புதுமை படைக்கும் நாள்.