இலங்கையை சூழவுள்ள கடற்பிரதேசம் அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு அதிகம் கொந்தளிப்பாக காணப்படும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
நாட்டைச் சூழவுள்ள கடற் பிராந்தியங்களில் வீசும் காற்றின் வேகம் இன்று முதல் அதிகரிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபடுகின்றவர்கள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அவதானநிலையத்தினால் வெளியிட்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை இன்றும் நாளையும் நாட்டின் தென்மேற்கு பகுதிகளிலும் வடமேல் மாகாணத்திலும் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பாரக்கப்படுகின்றது.
அத்துடன் மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடையிடையே மழை பெய்யலாம் என்றும் காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.