ஆஸ்திரேலியாவில் நடந்த வினோதம்

ஆஸ்திரேலியாவில் ஒரு காரின் அச்சில் ஏறிக்கொண்ட கோலா கரடி, 16 கிலோ மீட்டர் தொலைவுக்கு அதைப் பற்றிக்கொண்டு பயணித்த வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.

1-450-670x282

ஆஸ்திரேலியாவின் தெற்குப் பகுதியில் ஒருவரின் காரின் பின் அச்சில் ஏறிக்கொண்ட கோலா கரடி, அதைப் பற்றிக்கொண்டது. கார் ஓட்டுநர் காரை எடுத்தபோது அச்சமடைந்த கோலா கரடி, காரின் அச்சைச் சிக்கென்று இறுகப்பற்றிக் கொண்டது.

கார் வேகமாகச் சென்று கொண்டிருந்தபோது, சக்கரத்தின் அருகே இருந்து ஒரு மாறுபட்ட ஓசை கேட்டதையடுத்து ஓட்டுநர் அடிலெய்டு நகரில் காரை நிறுத்தியுள்ளார்.

சக்கரத்துக்கு அருகே கோலா கரடி அச்சைப் பிடித்துக்கொண்டு இருந்ததைப் பார்த்த அவர், தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார்.

தீயணைப்புத் துறையினர் காரின் சக்கரத்தைக் கழற்றியபின் அந்த கோலா கரடியை பிடித்துக்கொண்டுபோய் காட்டில் விட்டனர். இந்தக் கோலா கரடி, அச்சைப் பிடித்துக்கொண்டிருந்த நிலையில், அந்தக் கார் 16 கிலோமீட்டர் தொலைவு வரை சென்றது குறிப்பிடத்தக்கது.