சமீபத்தில் வெளிவந்த “எண்டம்மே ஜிமிக்கி கம்மல்” பாடலை இற்றைக்கு பல கோடி மக்களுக்கு மேல் பார்த்துவிட்டார்கள் என்ற செய்திகள் வெளிவந்துகொண்டே இருக்கின்றன.
இந்தப் பாடல் மோகன்லால் திரைப்படத்தில் ஏற்கனவே வெளிவந்துவிட்டாலும் இது மலையாளிகளைவிட இந்திய சினிமா ரசிகர்கள் யாருக்குமே அவ்வளவு பெரிதாக தெரிந்திருக்கவில்லை.
ஆனால் கேரளாவில் ஒரு பள்ளியில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்பட்ட ஆடலுடனான இந்தப் பாடலுக்கு அடுத்தடுத்த நாட்களிலேயே ரசிகர்கள் தொகை புல்லட் தொடருந்து போல எகிறிவிட்டது.
இந்தப் பாடலை அடிக்கடி பிரபலப்படுத்தியது தமிழ் நாட்டுத் தமிழர்கள் தான் என்ற பேச்சு அடிபட்டுவரும் நிலையில் தற்பொழுது இது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களும் படர்ந்து பட்டி தொட்டி எங்கணும் ஓங்கி ஒலிப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
அத்துடன் நின்றுவிடாது பல மொழிகளைச் சேர்ந்த மக்களும் இந்தப் பாடல் குறித்த தமது கருத்துக்களைப் பகிர்ந்துவருகின்றனர். அந்தவகையில் இது வெறுமனே கேரளாவிலோ தமிழ் நாட்டிலோ மட்டும் நின்றுவிடாது உலகம் எங்கும் பரவிவிட்டதென்றுதான் சொல்லமுடியும்.
இதனால் மலையாளிகள் தாம் மலையாளிகலாய் பிறந்ததை நினைத்துப் பெருமை கொள்வதாக பல இடங்களிலும் கருத்துத் தெரிவித்துவருவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
அதுதவிர குறித்த பாடல்கள் வட இந்திய வானொலிகளால் அதிகம் ஒலிபரப்பப்பட்டுவருவருவதாகக் குறிப்பிடும் மலையாளிகள் அதனை முதன்முதலில் பிரபலப்படுத்திய தமிழ் நாடு பற்றி எதுவுமே சொல்லவில்லை என்பதும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கதாகும்.