அரசு சம்பளம் பெறும் பள்ளி ஆசிரியர்கள், ‘டியூஷன்’ எடுக்க, தடைவிதிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில், நான்கு லட்சத்துக்கும் மேற்பட்டஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.
பெரும்பாலான ஆசிரியர்கள், அரசு சம்பளம் மற்றும் சலுகையை பெற்ற போதிலும், தங்கள் வீடுகளில், ‘டியூஷன்’ என்ற, தனிப் பயிற்சி வகுப்புகள் நடத்துகின்றனர்.
இதற்காக, மாணவர்களிடம் மாத கட்டணம் வசூலிக்கின்றனர்.