21 நாட்கள் போத்தலில் தலையை வைத்து மாட்டிக்கொண்டு தவித்த நாய்

பிளாஸ்டிக் போத்தலில் தலையை வைத்து, மாட்டிக்கொண்டு தவித்த தெருநாய் 21 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம்,  இந்தியாவின் புனே – தனாரிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

21 நாட்கள் போத்தலில் தலையை வைத்து மாட்டிக்கொண்டு தவித்த நாய்

புனேவில் தனோரி பகுதியில் உள்ள தெருநாய் ஒன்று பிளாஸ்டிக் போத்தலில் தலையை  வைத்து, மாட்டிக் கொண்டு தவித்துள்ளது.

போத்தலில் தலையில் வைத்து மாட்டியதால் சுவாசிக்க முடியாமலும், உணவு உட்கொள்ள முடியாமலும் துன்பப்பட்டு வந்துள்ளது.

இதனையடுத்து அப்பகுதி மக்கள், விலங்குகள் நல ஆர்வலர்களுக்கு தகவல் அனுப்பியுள்ளனர்.

நாயின் தலையிலிருந்து போத்தலை அகற்றும், விலங்குகள் நல ஆர்வலர்களின் முயற்சி தோல்வியடைந்ததால், நாயின் நிலை மிகவும் மோசமானது.

இதனையடுத்து அஜய் பட்டேல் என்ற போத்தல் அகற்றும் தன்னார்வலர், நாயை மீட்கும் பணியில் ஈடுபட்டார்.

பல நாட்களாக நாயைத் தேடி அலைந்த அஜய் பட்டேல், 21 நாட்களுக்குப் பிறகு கட்டுமானப் பகுதியில் அந்த நாயைக் கண்டுபிடித்து, அதன் தலையைப் பிளாஸ்டிக் போத்தலிலிருந்து விடுவித்துள்ளதாகவும் பின்னர் மீட்கப்பட்ட நாய்க்கு, உணவும் தண்ணீரும் அளித்ததாகவும் கூறியுள்ளார்.