அரசாங்க சேவையில் புதிதாக 20,000 பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
அண்மையில் அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சினால் உயர்தரத்தில் தேர்வுபெற்ற மாணவர்களுக்கான ‘யொவுன் சாவிய 2017’ திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் 10 லட்சம் தொழில்வாய்ப்புக்களை உருவாக்கும் நிகழ்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.