ரோமானியர்களும் சீனர்களும்தான் உலகில் முதன் முதலாக எண்களை உருவாக்கினர் என்று வரலாற்றில் புருடா விடுகிறார்கள்.
ஆனால் தமிழர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்பே தசமக் கணக்கீடு முறையை (Decimal Calculation) தனது எண்ணியலில் பயன்படுத்தியுள்ளனர்.
தமிழர்களின் தசமக் கணக்கீட்டு முறைய இன்று ஆய்வு செய்து ரோமானியர்களோடும் சீனர்களோடும் ஒப்பிட்டால் உலகிற்கு எண்களை வழங்கியவன் தமிழனே என மாற்றுக் கருத்து ஏதும் இல்லாமல் ஒப்புக்கொள்வார்கள்.
இத்தனை நுண்ணிய அளவிலான தசமக் கணக்கீட்டை தமிழன் உருவாக்க வேண்டிய தேவை அவனுக்கு எங்கிருந்து வந்தது என்ற கேள்வி எழலாம். அதில் தான் தமிழனின் கலை, கலாச்சார வாழ்வின் பெருமை அடங்கியிருக்கிறது. பிரமாண்ட கோவில்களையும், அரண்களையும் கட்டிய தமிழனுக்கு கலைவேலைப்பாடுகளை அளவீடு செய்வதற்கு தசமக் கணக்கீடு கண்டிப்பாகத் தேவை.
கோவில் சிற்பங்களில் உள்ள ஆயிரக்கணக்கான நுணுக்கமும் நுட்பமும் நிறைந்த வேலைப்பாடுகள், மண்டபங்களில் ஆயிரக்கணக்கில் நிறைந்துள்ள தூண்கள், என ஒரு நூல் இழை கூட கோணல் இல்லாமல் கட்டபட்ட பிரமாண்ட கட்டடங்களின் வேலைபாடுகளுக்கு நுண்ணிய கணித முறை மிக மிக அவசியமாக இருந்தது.
அப்படிப் பட்ட நம் கணக்குமுறையை அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ் எண்ணியல் தசமக் கணக்கீட்டு முறை: 1 – ஒன்று 3/4 – முக்கால் 1/2 – அரை கால் 1/4 – கால் 1/5 – நாலுமா 3/16 – மூன்று வீசம் 3/20 – மூன்றுமா 1/8 – அரைக்கால் 1/10 – இருமா 1/16 – மாகாணி(வீசம்) 1/20 – ஒருமா 3/64 – முக்கால்வீசம் 3/80 – முக்காணி 1/32 – அரைவீசம் 1/40 – அரைமா 1/64 – கால் வீசம் 1/80 – காணி 3/320 – அரைக்காணி முந்திரி 1/160 – அரைக்காணி 1/320 – முந்திரி 1/102400 – கீழ்முந்திரி 1/2150400 – இம்மி 1/23654400 – மும்மி 1/165580800 – அணு -> 6,0393476E-9 -> nano = 0.000000001 1/1490227200 – குணம் 1/7451136000 – பந்தம் 1/44706816000 – பாகம் 1/312947712000 – விந்தம் 1/5320111104000 – நாகவிந்தம் 1/74481555456000 – சிந்தை 1/489631109120000 – கதிர்முனை 1/9585244364800000 – குரல்வளைப்படி 1/575114661888000000 – வெள்ளம் 1/57511466188800000000 – நுண்மணல் 1/2323824530227200000000 – தேர்த்துகள்.
இவ்வளவு நுண்ணியமான தசமக் கணிதம் தமிழரின் பண்பாட்டில் பயன்பாட்டில் இருந்ததை எண்ணி, இன்றைய கல்குலேட்டர் தமிழன் பெருமை கொள்ள வேண்டும்.