கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் மற்றும் த.முருகானந்தமின் ராக்ஃபோர்ட் என்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்து வரும் படம் `மேயாத மான்’.
வைபவ் – ப்ரியா பவானிஷங்கர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் இந்த படத்தை ரத்ன குமார் இயக்குகிறார். பிரதீப் குமார் மற்றும் சந்தோஷ் நாராயண் இந்த படத்திற்கு இசையமைக்கின்றனர். ஏற்கனவே படத்தில் இருந்து `தங்கச்சி’ மற்றும் `என்ன நான் செய்வேன்’ என்ற இரு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
இந்நிலையில், `மேயாத மான்’ படத்தில் இருந்து அடுத்த பாடல் இன்று வெளியாக இருக்கிறது. இந்தியாவின் முதல் முகவரி பாடலாக (Address Song) வெளியாக இருக்கும் `அடியே எஸ்.மது’ பாடலை இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் வெளியிடுகிறார்.
அதனைத் தொடர்ந்து படத்தை வருகிற நவம்பரில் வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.