பாண் வியாபாரியால் 15 வயதான மாணவிக்கு நேர்ந்த விபரீதம்

நீர்கொழும்பு பகுதியில் 15 வயதான பாடசாலை மாணவியை பெற்றோருக்கு தெரியாமல் அழைத்துச் சென்று நண்பனின் வீட்டில் 5 நாட்கள் தங்கவைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 44 வயதான ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.rape4

திருமணமான இந்த சந்தேகநபர், 5 நாட்களின் பின்னர் மாணவியை அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டுள்ளார்.

பாண் விற்பனைக்காக தினமும் வீடுகளுக்கு வந்த நிலையில் குறித்த சந்தேகநபர் மாணவிக்கு அறிமுகமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நேற்று நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேகநபரை நாளைய தினம் (19) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.