-
மேஷம்
மேஷம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகள் ஆக்கப்பூர்வமாக செயல்படு வார்கள். பிரார்த்தனையை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். புதுமை படைக்கும் நாள்.
-
ரிஷபம்
ரிஷபம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடு கள் வந்து நீங்கும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரத் தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் நிம்மதி உண்டாகும். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.
-
மிதுனம்
மிதுனம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப் பீர்கள். பிள்ளைகளால் உற வினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாப மடைவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். தைரியம் கூடும் நாள்.
-
கடகம்
கடகம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். கைமாற்றாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். அழகு, இளமை கூடும். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார் கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.
-
சிம்மம்
சிம்மம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு, தாழ்வு மனப்பான்மை வந்துச் செல்லும். தன்னம்பிக்கை குறையும். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைக் கழிக்கப்படுவீர்கள். திட்டுமிட்டு செயல்பட வேண்டிய நாள்.
-
கன்னி
கன்னி: குடும்ப ரகசியங்களை மற்றவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். சிறு காயங்கள் ஏற்படக்கூடும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர் களிடம் நயமாகப் பேசுங்கள். உத்யோகத் தில் சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுங்கள். எச்சரிக்கை தேவைப்படும் நாள்.
-
துலாம்
துலாம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். செலவுகளை குறைக்க திட்ட மிடுவீர்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். பயணங் களால் மகிழ்ச்சி தங்கும். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் புது முடிவுகள் எடுப்பீர்கள். இனிமையான நாள்.
-
விருச்சிகம்
விருச்சிகம்: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறை வேறும். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். நம்பிக்கைக்குரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உங்களின் நிர் வாகத் திறமை வெளிப்படும். சாதிக்கும் நாள்.
-
தனுசு
தனுசு: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப் படுவீர்கள். உறவினர்களின் ஆதரவுப் பெருகும். பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.
-
மகரம்
மகரம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். உறவினர்களின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். செலவினங்கள் அதிகமாகும். சிலர் உங்களை உபத்திர வத்தில் சிக்க வைப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களைப் பற்றிக் குறைக் கூற வேண்டாம். பொறுமைத் தேவைப்படும் நாள்.
-
கும்பம்
கும்பம்: சகோதர வகையில் நன்மை உண்டு. மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். வேற்று மதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். எதிர்பாராத நன்மை உண்டாகும் நாள்.
-
மீனம்
மீனம்: குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் பாராட்டப்படுவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.