தமிழர்களின் மரபுவழித் தாயகமான தமிழீழம் வெகு விரைவில் உருவாகவேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் திரு வை.கோபாலசாமி வலியுறுத்திக் கூறியுள்ளார்.
கடந்த 11ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையின் 36வது கூட்டத்தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. இதில் பல நாடுகளிலும் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான உள்ளக கருத்து வெளிப்பாடுகள் நடைபெற்றுவருகின்றன.
இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் தமிழ் மக்களின் சார்பாக பல்வேறு தமிழ் உணர்வாளர்களினால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.
இந்நிலையில், இந்த கூட்ட தொடரில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே வை.கோபாலசாமி இந்த வலியுறுத்தலினை சர்வதேசத்திடம் முன்வைத்துள்ளார்.
மேலும் வடக்கில் நிலைகொண்டுள்ள சிங்கள இராணுவத்தினர் மிக வ்ரைவாக வெளியேற்றப்பட வேண்டும் எனவும் இதன்போது அவர் குறிப்பிட்டுள்ளார்.