பீகாரில் கள்ளக் காதலில் ஈடுபட்ட பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டார். காதலன் கண் மற்று வாயில் ஆசிட் ஊற்றிய கொடூரம் நடந்துள்ளது.
பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் உள்ள மதுரா உத்தர் கிராமத்தை சேர்ந்தவர் கன்ஷியாம்சிங் (35). இவரது அண்டை வீட்டில் ஜாக்ரா யாதவ் என்பவர் குடியிருக்கிறார். இவரது மனைவி பரஸ்மணி தேவி (30).
இவருக்கும் கன்ஷியாம் சிங்குக்கும் இடையே கள்ளக் காதல் இருந்தது. சம்பவத்தன்று இரவு ஜாக்ரா யாதவ் வீட்டுக்கு கன்ஷியாம் சிங் சென்றார். அங்கு பரஸ்மணி தேவியுடன் கள்ளக்காதலில் ஈடுபட்ட போது கையும் களவுமாக சிக்கினார்.
அதை தொடர்ந்து 15-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று திரண்டு கன்ஷியாம் சிங்கையும், பரஸ்மணி தேவியையும் சரமாரியாக அடித்து உதைத்தனர். அதில் பரஸ்மணி தேவி அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
அத்துடன் கும்பல் விடவில்லை. கன்ஷியாம் சிங்கை ‘தரதர’வென இழுத்து சென்றனர். பின்னர் அவரது கண் மற்றும் வாயில் ‘ஆசிட்’ ஊற்றினர்.
இதனால் அவர் பலத்த காயம் அடைந்து வலியால் துடித்தார். தகவல் அறிந்ததும் நர்பத்கஞ்ச் போலீசார் விரைந்து சென்று கன்ஷியாம் சிங்கை மீட்டனர்.
பின்னர் அருகில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேல் சிகிச்சைக்காக அவர் போர்பெஸ் கஞ்சில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக் கப்பட்டார். அது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.