உண்மை காதல் மணித்தியால வித்தியாசத்தில் மரணத்தை தழுவிய தம்பதிகள்

கனடிய போர் வீரர் ஒருவரும் பப்ளியான ஆங்கில பெண் ஒருவரும் 1941 போர்க்காலத்தில் லண்டனில் சந்தித்தனர்.

szax

திருமணம் செய்து கொண்ட இருவரும் தங்கள் 75-வது வருட நிறைவை ஆகஸ்ட் 22-ல் கொண்டாடினர். இருவரும் மணித்தியால வித்தியாசத்தில் வைத்தியசாலையில் மரணமடைந்தனர்.

94-வயதுடைய ஜின் நிமோனியா காரணமாக ஒன்ராறியோ குயின்ஸ்வே காள்ரன் வைத்தியசாலையில் செவ்வாய்கிழமை அனுமதிக்கப்பட்டார்.

அடுத்த நாள் புதன்கிழமை 97-வயதுடைய ஜோர்ஜ் ஜீனுடன் தொலைபேசியில் கதைத்தார்.அதற்கடுத்த நாள் ஆழந்த தூக்கத்தில் சென்ற ஜோர்ஜூம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

வைத்தியசாலை நிர்வாகிகள் தம்பதிகள் இருவரையும் ஒரே தளத்தில் சேர்க்க முயன்றனர்.ஆனால் அதற்கு முன்னர் ஜேன் ஆழ்ந்த அமைதியான தூக்கத்திற்கு சென்று விட்டார். வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30மணிக்கு இச்சம்பவம் நடந்தது. அதே தினம் காலை 9.45மணிக்கு அவரை தொடரந்து ஜோர்ஜ் சென்றுவிட்டார்.1942-ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

aaz

ஜோர்ஜ் 21-வயதில் கனடாவின் இளைய மேஜராக பதவி வகித்தவர். 18-வயதுடைய தீயணைப்பு வீரரான ஜீனை அவரது 18வது வயதில் சந்தித்தார். 1942-ல் ஜீனின் சொந்த ஊரான Kingston Upon Thames திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களிற்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். கனடாவின் 50,000 போர் மணமக்கள் சார்பில் ஜீனிற்கு Order of the British Empire ன் அங்கத்தவர் என்ற பெயர் 2006-ல் வழங்கப்பட்டது.