நாட்டின் ஊடாக இன்று இடைக்கிடையில் ஓரளவு கடும் காற்று மற்றும் நாட்டை சுற்றியுள்ள கடற்பிரதேசங்களில் இடைக்கிடையில் கடும் காற்று வீசக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
விசேடமாக மலையகத்திலும் , வடக்கு , வடமத்திய , கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இதன் தாக்கம் உணரப்படும்.
மேல் , சப்ரகமுவ , வடமேல் மற்றும் மத்திய மாகாணங்கள் போன்று காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 36 மணி நேரத்திற்கான வானிலை அறிக்கையை வெளியிட்டு , காலநிலை அவதான நிலையம் இதனை குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை , நாட்டின் வடகிழக்கு கடற் பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 70-80 வரை அதிகரிக்கக்கூடும் எனவும் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
புத்தளம் தொடக்கம் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரை ஹம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் வரையான ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 60-70 கிலோமீற்றர் வேகம் வரை அதிகரிக்கக்கூடும் எனவும் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு மீனவர்கள் மற்றும் கடற்சார் சமூகத்தை வானிலை அவதான நிலையம் கோரியுள்ளது.