யாழ்ப்பாணத்தில் பிறந்து 6 நாட்களேயான ஆண் சிசு ஒன்று கழுத்து அறுக்கப்பட்டு கொடூர கொலை செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 8 ஆம் திகதி மகப்பேற்றிற்காக 17 வயதான திருமணமாகாத சிறுமி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவரிற்கு மறுநாள் பகல் 9 ஆம் திகதி பிற்பகல் 3 மணியளவில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஆண்குழந்தை ஒன்று பிரசவிக்கப்பட்டுள்ளது.
குழந்தையின் பிறப்பு நிறை குறைவான காரணத்தினால், குழந்தையானது முதிரா குழந்தைகளை பராமரிக்கும் விடுதியில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்துள்ளது.
இதேவேளை, குழந்தைக்கான தாய்ப்பாலை வழங்குவதற்காக தாயான சிறுமியிடம் குழந்தையை சிறிது நேரம் வழங்குவது வழக்கமாகும்.
இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்திலேயே இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த 15 ஆம் திகதி காலை தாய்ப்பால் வழங்குவதற்காக குறித்த சிறுமியிடம் வழங்கப்பட்ட குழந்தையானது சிறிது நேரத்தில் பெற்ற தாயினால் கொலை செய்யப்பட்டுள்ளது.
அப்பிள் வெட்டுவதற்கு பயன்படும் சிறிய கத்தி ஒன்றின் மூலம் பெற்ற குழந்தையின் கழுத்தை சிறுமி அறுத்துள்ளார்.
குறித்த சிசுவானது கொலை செய்யப்படவில்லை. அது தாய்ப்பால் புரைக்கேறியதால் ஏற்பட்ட சுவாச கோளாரால் மரணமானது என மருத்துவ அறிக்கை வழங்கப்பட்டு குறித்த சிறுமி வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.