இந்தியாவின் பெங்களூர் ஒசூர் மேம்பாலத்தில் கார் ரேஸ் நடத்திய பள்ளி மாணவர்களில் ஒருவரின் தலை துண்டான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவில் ஐடி ஊழியர்களின் மகன்கள் இருவர்கள் அடிக்கடி கார் ரேஸ் நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இரவு நேரத்தில், தங்கள் தந்தையின் கார்களை எடுத்துக்கொண்டு, தொழிலதிபர் ஒருவரின் மகனையும் சேர்த்துக் கொண்டு மேம்பாலங்களில் ரேஸ்களில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஞாயிறு குறித்த மூவரும் வழக்கம் போல் நள்ளிரவு ஒரு மணிக்கு பெங்களூர் ஒசூர் மேம்பாலத்தில் கார் ரேஸ் நடத்தியுள்ளனர்.
அப்போது, போட்டியில், யார் முதலில் வருவது என்ற போட்டி நடத்தப்பட்டுள்ளது. இதில் மூவரும் 140 கி.மீற்றர் வேகத்தில் அதிவேகமாக காரை ஓட்டி சென்றுள்ளனர்.
கார் பாலத்தில் இறங்கும் போது, மூன்று கார்களும் ஒன்றோடு ஒன்று உரசியதால், கட்டுப்பாட்டை இழந்த ஸ்கோடா கார், பாலத்தின் தடுப்பில் மோதி கவிழந்தது.
இதில் காரை ஓட்டி வந்த பள்ளி மாணவனின் தலை துண்டானதால், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.மேலும், மற்றொரு கார், எதிரே வந்த லாரியில் மோதியதில் மினிலாரி கவிழ்ந்தது.
அந்த காரை ஓட்டி வந்த சிறுவன், லாரி டிரைவர் உயிர்பிழைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.