ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அதிகாரபூர்வ டுவிட்டர் தளம் தற்போது தமிழ் மொழியிலும் இயங்குகின்றது.
ஜனாதிபதியின் நியூயோர்க் பயணத்துடன் இந்த தமிழ் டுவிட்டர் தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 72ஆவது கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பாரியாருடன் அமெரிக்கா சென்றுள்ளார்.
அந்த வகையில் நேற்று காலை நியூயோர்க் ஜோன் எப் கெனடி சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர பிரதிநிதி றொகான் பெரேரா, நியூயோர்க்கிலுள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் வரவேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.