பெண்களின் உடையணிந்து இரவு நேரத்தில் பண்டாரவளை நகரில் காணப்பட்ட ஆண் ஒருவரைக் கைது செய்துள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த சனிக்கிழமை இரவு சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடியமை தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டுக்கமைய அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சந்தேகநபர் இராணுவத்தில் பணியாற்றிவரும் ஊவா பரணகம மெதவெல உடுகிந்த பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதானவர் என தெரியவந்துள்ளது. சந்தேக நபரின் கைத்தொலைபேசியை சோதனையிட்டபோது அதிலிருந்து பெருந்தொகையான ஆபாசப்படங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்களின் போது தான் பார்த்த ஆபாசப் படங்களிலுள்ள பெண்களைப் போன்று தனக்கும் உடையணிந்து கொள்வதற்கு ஆசை ஏற்பட்டதனால் இவ்வாறு பெண்கள் போன்று ஆடையணிந்து இரவில் உலாவந்ததாக தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பண்டாரவளை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்ட வேளையில் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் மேற்கொள்கின்றனர்.