அதிக குடிகாரர்கள் எந்த நாட்டில் உள்ளார்கள் தெரியுமா? தப்பியது இலங்கை, இந்தியா!

உலகிலேயே அதிகமாக மது அருந்தும் முதல் 25 இடங்களைப் பிடித்த நாடுகளின் பட்டியல் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.

Drinkers-425310

உலக சுகாதார அமைப்பு வருடத்திற்கு 2.5 மில்லியன் பேர் மது அருந்துதல் காரணமாக இறந்துவிடுவதாகவும், 4 சதவித மரணங்கள் குடிப்பழக்கத்தாலே ஏற்படுகிறது என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

அபிவிருத்தி அடைந்த நாடுகளில் பொதுவாக மதுப் பழக்கம் மிக அதிக அளவிலும், இஸ்லாமிய மக்கள் அதிகமுள்ள நாடுகளில் மது பழக்கம் குறைந்த விகிதத்திலும் இருந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே அதிகமாக மது அருந்தும் முதல் 25 இடங்களைப் பிடித்த நாடுகளில் முதல் இடத்தில் பின்லாந்தும் இரண்டாவது இடத்தை ஜேர்மனியும் பிடித்துள்ளது.

அத்துடன் லக்ஸம்பர்க்,ஆஸ்திரியா, நெதர்லாந்து, ஸ்லோவாக்கியா,டென்மார்க் ஆகிய நாடுகள் முறையே மூன்றாம், நான்காம், ஐந்தாம்,ஆறாம் மற்றும் ஏழாம் இடங்களை பெற்றுள்ளன.

இதேவேளை பிரித்தானியா எட்டாம் இடத்திலும்,பிரான்ஸ் ஒன்பதாம் இடத்தையும் பிடித்துள்ளது.

தொடர்ந்தும் அயர்லாந்து, போர்ச்சுகல்,தென் கொரியா, லூதியானா, குரோஷியா, பெலாரஸ், ஸ்லொவேனியா ஆகிய நாடுகள் முதல் பதினாறு இடங்களுக்குள் உள்ளடங்குகின்றது.

அதேவேளை ரொமானியா, அண்டோரா, எஸ்தோனியா, உக்ரேன், ரஷ்யா, ஹங்கேரி, செக் ரிபப்ளிக், மால்தோவா, லத்வியா ஆகிய நாடுகள் முதல் 25 இடங்களில் உள்ளன.

இந்நிலையில் அதிர்ச்சி தரும் தகவல் யாதெனில் எய்ட்ஸ் நோய் மற்றும் வன்முறை அல்லது காசநோய் ஆகியவற்றால் ஏற்படும் இறப்புகளைவிட மதுவின் காரணமாக மிக அதிகமான இறப்புகள் ஏற்படுகின்றமை.

இந்நிலையில் அதிகப்படியான மது அருந்தும் நாடுகளையும், அவற்றின் மது நுகர்வு விகிதங்களையும் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.