மதுரை எஸ்.எஸ் காலனியை சேர்ந்தவர் ஜோதி இவரது மகளை செல்வின் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.
இந்நிலையில் தாயிக்கு சமமான மாமியரை செல்வின் அவரது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி தோட்டத்தில் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சில தினங்களாக காணாமல் போன ஜோதியின் பெயரில் புகார் மனு அளிக்கப்பட்டதை அடுத்து பொலிசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஜோதி அவரது மருமகனால் வன்கொடுமை செய்து கொன்றது தெரியவந்துள்ளது.
இதனால் பொலிசார் செல்வின் மற்றும் அவரது நண்பர்களை கைது செய்ததோடு படுகொலை செய்யப்பட்டு தோட்டத்தில் புதைக்கப்பட்ட உடலை தாசில்தார் முன்நிலையில் மருத்துவ சோதனைக்காக தோண்டி எடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.