தொழில்நுட்ப உலகின் மிக முக்கிய நிறுவனமான ஆரக்கிள் வியாழக்கிழமை, நடப்பு நிதியாண்டுக்கான முதல் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. கடந்த காலாண்டை விசடவும் 14 சதவீத அதிக லாபத்தை அடைந்தாலும், வரும் காலாண்டில் இந்நிறுவனத்தின் வளர்ச்சி வாய்ப்புகள் முதலீட்டாளர்கள் மத்தியில் மந்தமாகத் தெரிந்த காரணத்தால் இந்நிறுவனப் பங்குகளின் மதிப்பு அதிகளவில் குறைந்தது.
6.5 சதவீதம் சரிவு..
வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் மட்டும் இந்நிறுவனத்தின் பங்குகள் சுமார் 6.5 சதவீதம் வரை சரிந்தது. இதன் காரணமாக ஆரக்கிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் 14 பில்லியன் டாலர் அளவிற்கு இழந்தது.
இந்த இழப்பு இந்நிறுவனத்தின் தலைவர் லேரி எலிசன் அவர்களையும் அதிகளவில் பாதித்துள்ளது.
லேரி எலிசன்
ஆரக்கிள் நிறுவனத்தின் துணை நிறுவனர் மற்றும் நிர்வாகத் தலைவரான லேரி எலிசன் இந்நிறுவனத்தின் 25 சதவீத பங்குகளை வைத்துள்ளார். காலாண்டு முடிவுகளால் பங்கு மதிப்பில் ஏற்பட்ட சரிவு, லேரி சுமார் 3.7 பில்லியன் டாலரை இழந்தார்.
பணக்காரர் பட்டியல்
உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இருக்கும் லேரி எலிசன் பங்கு மதிப்புச் சரிவினால் பாதிப்பு ஏற்பட்ட பின்பு 7வது இடத்திலேயே உள்ளார். இப்போதும் 8வது இடத்தில் இருக்கும் பெர்நாட் அர்னால்ட் அவர்களை விடவும் 1.7 பில்லியன் டாலர் அதிகச் சொத்துக்கள் உடன் உள்ளார் லேரி எலிசன்.
ஆரக்கிள் பங்குகள்
2017ஆம் ஆண்டி மட்டும் ஆரக்கிள் நிறுவன பங்குகள் மட்டும் சுமார் 29 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதன் மூலம் லேரியின் சொத்துகளும் சுமார் 12.5 பில்லியன் டாலர் உயர்ந்தது.