பாட்டியால் ஆறு மாத குழந்தைக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை

கல்கத்தாவைச் சேர்ந்தவர் தும்பா. இவருக்கு 6 மாத குழந்தை உள்ளது. கடந்த 3 ஆம் திகதி குழந்தையுடன் தனது அறையில் தூங்கிக் கொண்டிருந்தார் தும்பா.

2596601E00000578-0-image-a-23_1423705705101

கடந்த 3 ஆம் திகதி குழந்தையுடன் தனது அறையில் தூங்கிக்கொண்டிருந்தார் தும்பா. அப்போது குழந்தையின் பாட்டி மற்றும் மாமா ஆகியோர் அறைக்குள் ரகசியமாக நுழைந்துள்ளனர். தூங்கிக் கொண்டிருந்த 6 மாத குழந்தையின் கண்களுக்குள் அசிட்டைச் செலுத்தியுள்ளனர்.

குழந்தையின் கதறல் கேட்ட பின்னரே தும்பாவிற்கு என்ன நடந்தது என்பது தெரியவந்தது. தும்பா மற்றும் அவரது கணவர் குழந்தையை எஸ்.எஸ்.கே.எம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர்கள் கண் மருத்துவரிடம் அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார்.

இதனையடுத்து குழந்தை கல்கத்தா தேசிய வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக கல்கத்தா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.