7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்த கொடூரன், பொது இடத்தில் வைத்து தூக்கிலிடப்பட்டான்.
இந்த சம்பவம் ஈரானில் இடம்பெற்றுள்ளது.
கடந்த ஜீன் மாதம் ஈரானில் 7 வயது சிறுமியை, 42 வயதுடைய இஸ்மாயில் ஜபர்ஸதா என்பவர் பாலியல் பலாத்காரம் செய்து, படுகொலை செய்தான்.
இது தொடர்பான வழக்கு விசாரணை முடிவில், இஸ்மாயிலுக்கு, மரண தண்டனை விதித்து, நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர்.
இந்நிலையில், அர்டெபில் மாகாணத்தில், பர்ஸாபாத் நகரில், பொது இடத்தில், ஏராளமான மக்கள் முன்னிலையில், இஸ்மாயில் தூக்கிலிடப்பட்டான்.
அவன் தூக்கிலிடப்படும் காட்சியை பார்த்து, மக்கள், மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
இஸ்மாயில் தூக்கிலிடப்படும் காட்சியை, உள்ளூர் மக்கள் வீடியோ பதிவு செய்து, இணையதளத்தில் வெளியிட்டனர்.
சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இஸ்மாயிலிடம் விசாரணை நடத்தி, ஒரே வாரத்தில் அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
மரண தண்டனையை, உடனே நிறைவேற்ற வேண்டும்’ என, ஈரான் அதிபர், ஹஸன் ரூஹானி உத்தரவிட்டார்.
அதைத் தொடர்ந்து,தாமதமின்றி, இஸ்மாயிலுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.