ஜப்பானில் அதிசக்திவாய்ந்த நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஜப்பான் நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள கமைசி (Kamaishi) என்ற இடத்திலிருந்து சுமார் 175 மைல் தொலைவிற்கு டோக்கியோ நேரப்படி 2.37க்கு இந்த அதி சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க புவியியல் மையத்தின் தகவற்படி இது 6.1 றிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.
இதேவேளை, மெக்சிகோவில் நேற்று முந்தினம் 7.1 ரிக்டர் அளவிற்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தமை தெரிந்ததே. அதனைத் தொடர்ந்தே ஜபானிலும் இந்த சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
கமைசி நகரிலிருந்து சுமார் 175 கி.மீற்றர் தொலைவில்தான் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் குறித்த பகுதியிலிருந்து பத்து கிலோமீட்டர் சுற்றுவட்டாரப்பகுதி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் சேத விபரங்கள் மற்றும் மீட்பு நடவடிக்கை பற்றியும் தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.
யப்பான் பாரிய நில நடுக்கங்களிலிருந்தும் சுனாமியிலிருந்தும் தற்பொழுது போதிய முன்னெச்சரிக்கையுடன் செயற்படுவதாக புவியியலாளர்கள் கருத்துக்கள் முன்வைத்துள்ளனர். குறிப்பாக கடந்த 2011 ஆம் ஆண்டில் புகுசிமாவில் ஏற்பட்ட பாரிய நில நடுக்கங்களால் ஜப்பானில் பாரிய சேதங்களும் இழப்புக்களும் ஏற்பட்டிருந்தன. அதன் பின்னரே ஜப்பான் இது தொடர்பில் மிகவும் விழிப்பாக இருப்பதாகச் சொல்கின்றனர்.
ஜப்பான் அதிகமான நில நடுக்கங்களையும் சுனாமியையும் தாங்கும் நாடாக உலகிலேயே முதல் வரிசையில் காணப்படுகிறது. உலகத்திலேயே நான்காவது பேரனர்த்தமாக 1900 ஆம் ஆணடு யப்பானில் ஒரு நில நடுக்கம் ஏற்பட்டிருந்தது. இதன்போது 130 அடி உயரத்திற்கு அலைகள் எழுந்து ஜப்பானைத் தாக்கியிருந்தது. இருபதாயிரம் மக்களை அழித்த இந்தப் பேரனர்த்தம் 220பில்லியன் டொலர்கள் வரை இழப்பினை ஏற்படுத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.