‘பிரேமம்’ என்ற மலையாளப் படத்தின் மூலம் இளைஞர்களின் கனவுக் கன்னியாக மாறியவர் சாய் பல்லவி. அப்படத்தில் மலர் டீச்சராக நடித்திருந்த அவரது வேடம் அனைவராலும் விரும்பி பார்க்கப்பட்டது.
இப்படத்தின் மூலம் மலையாள திரையுலகில் மட்டுமின்றி, தமிழ் திரையுலக ரசிகர்களையும் தனது அழகாலும், நடிப்பாலும் மிகவும் கவர்ந்தார். இவரை தமிழில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது.
மணிரத்தினம் இயக்கத்தில் ‘காற்று வெளியிடை’ படத்திலும், விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் ‘ஸ்கெட்ச்’ படத்திலும் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றது.
ஆனால் அந்த படங்கள் எதுவும் கைகூடவில்லை. ஆனால், தற்போது விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கரு’ என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளார்.
இந்த படம் ஒரு தாய்க்கும், மகளுக்குமான பாசத்தை பற்றிய கதை உருவாக்கி இருக்கிறார்கள். சாய் பல்லவி இதில் நான்கு வயது சிறுமிக்கு அம்மாவாக நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சத்தமே இல்லாமல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.