இலங்கை இளைஞர்கள் இத்தாலியில் கடுமையாக மோதிக்கொண்டார்கள்

இத்தாலியில் இரு இளைஞர்கள் கடுமையாக மோதிக் கொண்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இத்தாலி வெரோனா நகரத்தின் பிரதான ரயில் நிலையத்திற்கு அருகில் இலங்கையை சேர்ந்த இரு இளைஞர்கள் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த மோதல் சம்பவம் நேற்று முன் தினம் காலை இடம்பெற்றுள்ளது. இருவருக்கும் இடையிலான மோதலை கட்டுப்படுத்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
என்ன நோக்கத்திற்காக மோதல் ஏற்பட்டது என்பது தொடர்பில் தகவல் வெளியாகவில்லை. எனினும் இந்த மோதல் சம்பவம் இத்தாலிய மக்களை கடும் அதிருப்பதியில் ஆழ்த்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த மோதல் சம்பவம் தொடர்பான தகவலை இத்தாலி நாட்டை சேர்ந்தவர்களின் பேஸ்புக் பக்கத்திலேயே பதிவாகியுள்ளது.
“இவர்கள் மிகவும், மோசமான பிள்ளைகள். இவர்கள் மரியாதையுடன் வாழ்வதற்கு வந்துள்ளார்களா அல்லது எங்களையும் அழித்து எங்கள் நாட்டையும் அழிப்பதற்கு வந்துள்ளார்களா?” என ஒருவர் இந்த மோதல் தொடர்பான காணொளியுடன் பதிவிட்டுள்ளார்.