தமிழ் சினிமாவில் தனக்கென தனி ஸ்டைலுடன் மாஸ் காட்டிவரும் பிரபுதேவா மீண்டும் ஒருமுறை விஜய்யுடன் இணையவிருப்பதாக கூறப்படுகிறது.
நடிகர், இயக்குநர், நடன இயக்குநர் என பன்முகத் திறமைகளை கொண்டவர் பிரபுதேவா.
நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் இயக்கிய “தேவி” படத்தின் மூலம் பிரபுதேவா ரீ-என்ட்ரி கொடுத்திருந்தார். அதனைத்தொடர்ந்து விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த “வனமகன்” படத்தை தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் பிரபுதேவா தயாரித்திருந்தார்.
இதையடுத்து பிரபுதேவா தற்போது `யங் மங் சங்’ மற்றும் `குலேபகாவலி’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்த இரு படங்களை முடித்த பிறகு பிரபுதேவா மீண்டும் விஜய் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
விஜய் தற்போது சாய் பல்லவியை வைத்து கரு என்ற படத்தை இயக்கி வருகிறார். அந்த பட பணிகளை முடித்த பிறகு இருவரும் மீண்டும் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.