தென்னிந்திய சினிமாவுலகில் மட்டுமல்லாது பாலிவுட் சினிமாவிலும் கால்பதித்து வெற்றி கண்டு வருபவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. அவர் நடித்து சுந்தர்.சி இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் அரண்மனை. தற்போது அந்த படம் கன்னடத்தில் ரீமேக்காக உள்ளது.
கன்னட தயாரிப்பாளர் ரமேஷ் யாதவ் அரண்மனை படத்தை அப்தமித்ரா 2 என்ற பெயரில் ரீமேக் செய்கிறார். ரமேஷ் யாதவ் தமிழிலிருந்து கன்னடத்திற்கு 50க்கும் மேற்பட்ட படங்களை ரீமேக் செய்தவர். அரண்மனை படத்தின் ஒவ்வொரு காட்சியையும் அப்படியே ரீமேக் செய்யாமல் கன்னட சினிமா உலகத்திற்கு ஏற்ப மாற்றி வெளியிட இருக்கிறார். இப்படம் ரீமேக் படமாக இல்லாமல் அதன் தழுவலாகவும் இருக்கும் என அவர் கூறியிருப்பதாக டெக்கான் கிரோனிக்கல் பத்திரிகை தெரிவித்துள்ளது.
இயக்குநர் வாசு இயக்க இருப்பதாக பேசப்பட்டு வரும் இப்படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் நடிகர் நடிகைகள் மற்றும் இதர கலைஞர்கள் குறித்த தகவல் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்டுகிறது.
அரண்மனை படத்தில் ஹன்சிகாவுடன் சுந்தர்.சி, வினய்,ஆண்ட்ரியா, ராய் லக்ஷ்மி, சந்தானம் ஆகியோர் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.