பொலிஸ் நிலையத்தில் சிக்கிய பெண் வேடம் போட்ட ஆண்

பிலியந்தலை பொலிஸார் இரண்டு பெண்களையும், இரண்டு ஆண்களையும் கைதுசெய்த நிலையில் இரண்டு பெண்களில் ஒருவர் ஆண் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Stress-Depression-Wallpapers-22 (www.darkwallz.com)

பிலியந்தலை – தம்பே ஹொட்டலில் பிறந்தநாள் விருந்து நடந்துள்ளது. அதில் கலந்துக்கொண்ட இரண்டு தரப்புக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் இரண்டு தரப்பினரும் தாக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் இரண்டு ஆண்களையும், இரண்டு பெண்களையும் கைது செய்தனர்.
சந்தேக நபர்கள் அணிந்திருந்த ஆடைகள் கலைந்திருந்தால் இவர்கள் கட்டிப்புரண்டு சண்டையிட்டிருக்கலாம் என சந்தேகித்த பிரதான பொலிஸ் பரிசோதகர் சாராநாத் சமரகோன், பெண்களை சோதனையிடுமாறு பெண் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு உத்தரவிட்டுள்ளார்.
பெண் பொலிஸ் அதிகாரி ஒரு பெண் சந்தேகநபரை அறைக்கு அழைத்து பரிசோதிக்க முற்பட்டுள்ளார். அப்போது பெண் போல் ஆடை அணிந்தவர் ஆண் என்பது தெரியவந்துள்ளது.
இது பெண் பொலிஸ் அதிகாரி, பொறுப்பதிகாரிக்கு அறிவித்துள்ளார். இதனையடுத்து அந்த நபரை அழைத்து பொறுப்பதிகாரி விசாரணை நடத்தியுள்ளார்.
ஆசைப்பட்டு பெண் போல் உடையணிந்து வந்தாகவும், பிறந்தநாள் விருந்தை நடத்தியவருக்கும் இது தெரியும் எனவும் சந்தேக நபர் பொறுப்பதிகாரியிடம் கூறியுள்ளார்.
இந்த நிலையில், கைதுசெய்யப்பட்டுள்ள மூன்று ஆண்கள் மற்றும் பெண்ணை, குடிபோதையில் தகராறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உள்ளனர்.
இதேவேளை, கடந்த காலத்திலும் பெண்கள் போல் உடையணித்த ஆண்கள் பற்றிய செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.