ஜேர்மனியில் தனியாக சென்ற சிறுமி ஒருவரை கொடூரமாக கற்பழித்த இரண்டு அகதிகளை அந்நாட்டு பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த 27, 18, மற்றும் 17 வயதுடைய அகதிகள் ஜேர்மனியில் புகலிடம் கோரி பவேரியா மாகாணத்தில் வசித்து வந்துள்ளனர்.
நேற்று இரவு நேரத்தில் Hohenkirchen-Siegertsbrunn ரயில் நிலையத்திற்கு அருகில் கூட்டம் ஒன்று நடந்துள்ளது.இக்கூட்டத்தில் 16 வயது சிறுமி உள்பட மூன்று அகதிகளும் பங்கேற்றுள்ளனர். கூட்டம் முடிந்ததும் அனைவரும் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
சிறுமி இரவு நேரத்தில் தனியாக நடந்து ரயில் நிலையத்தை நோக்கி சென்றுள்ளார். சிறுமி தனியாக செல்வதை அறிந்துக்கொண்ட மூன்று அகதிகளும் அவரை பின் தொடர்ந்து சென்றுள்ளனர்.ஒதுக்கு புறமாக ஓரிடத்திற்கு சென்றதும் சிறுமி மீது 27 மற்றும் 17 வயதான வாலிபர்கள் பாய்ந்துள்ளனர். சிறுமியால் எதிர்க்க முடியாததால் இருவரும் அவரை கற்பழித்துள்ளனர்.
மூன்றாவதாக இருந்த நபர் சிறுமியை கற்பழிக்க முயன்றபோது அங்கு சிலர் வந்ததால் மூவரும் அங்கிருந்து தப்பியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து உடனடியாக தகவல் பெற்ற பொலிசார் ஹெலிகொப்டரில் தேடுதல் வேட்டையை தொடங்கி சில மணி நேரத்தில் மூவரையும் கைது செய்துள்ளனர்.
இவ்வழக்கு தொடர்பாக இன்று நீதிமன்ற விசாரணை வந்தபோது சிறுமியை கற்பழித்த இருவரையும் காவலில் வைக்கமாறும், 18 வயதான வாலிபரை விடுதலை செய்வதாகவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்