தமிழர்கள் கோவிலில் ஆர்கிமிடிஸ் தத்துவம்..!!

தமிழர்கள் கோவிலில் ஆர்கிமிடிஸ் தத்துவம்..!! ஆர்கிமிடிஸ் கண்ட தத்துவத்தை அன்றே, அம்பாரியில் அமர்ந்து கொண்டு அசால்ட்டாக கண்டறிந்தவன் தமிழன்..!!

ஆர்கிமிடிஸ் கண்ட தத்துவத்தை அன்றே, அம்பாரியில் அமர்ந்து கொண்டு அசால்ட்டாக கண்டறிந்தவன் தமிழன்..!! ஆர்கிமிடிஸ் சொல்வதற்கு நூற்றாண்டுகளுக்கு முன்னரே நாம் நடைமுறை படுத்திவிட்டோம்..

அரசன் கோச்சடையானை நம்மில் பலருக்கு தெரியும். ரஜினி நடித்த படம் அன்று..இவர் உண்மையான கோச்சடையான்.. அரசன் கோச்சடையானுக்கு ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் என்றும் ஒரு பெயரும் உண்டு.

king

சிதம்பரம் நடராசர் கோயில், மற்றும் திருவரங்கத்தில் உள்ள இரங்கநாதர் கோவில் இந்த இரண்டு கோவில்களும் தான் ஜடாவர்மனின் திருப்பணிகளில் அதிகம் பலனடைந்த கோயில்கள் என்பது குறிப்பிடத்தக்கது

திருவரங்கத்தில் உள்ள இரங்கநாதர் கோவிலுக்கு “துலாபார தானம் “ அதாவது ஒருவரின் எடைக்கு எடை தங்கம் என்கிற அளவுக்கு தானம் செய்தார். தற்போதும் கூட இந்த பழக்கம் வழக்கத்தில் உண்டு..தங்கத்திற்கு பதிலாக வேறு சில பொருள்களை தரும் பழக்கம் உள்ளது..

ஆனால் ஜடாவர்மன் செய்த தானம் சற்று மாறுபட்டது.., ஒரு மனிதனின் எடைக்கு எடை தானம் தருவதை மாற்றி,

இவர் தனது நாட்டில் இருக்கும் ஒரு யானைக்கு மேல் அம்பாரி ஒன்றை அமர்த்தி அந்த அம்பாரியில் தானும் தனது அரசியும் முழு கவசத்துடன் சேர்ந்து உட்கார்ந்து கொள்வார்கள்..

இவர்களுடன் யானை பாகனும் அமருவான்..இந்த மொத்த எடைக்கும் நிகரான எடை தங்கத்தை திருவரங்கம் கோயிலுக்கு தானம் வழங்கினார்.

சரி கோச்சடையானுக்கும் ஆர்கிமிடிஸ்க்கும் என்ன சமந்தம்?

ஜடாவர்மன், இந்த துலாபார தானம் செய்ய முதலில் காவிரிக் கரையில் ஒரு குள மண்டபத்தை அமைத்தான்..

ஒரு தெப்பம் நீரில் மிதக்கும் பலகையை அதில் கட்டினான். அந்த தெப்பத்தின் மேல் அம்பாரி வைத்த யானையும் அதன் மீது அரசனும் அரசியும் பாகனும் இருப்பார்கள்..

இப்போது அந்த தெப்பம் இந்த மொத்த கனத்தையும் தாங்கி சிறிதளவு நீரில் அமிழ்ந்தது (அமுக்கப்படும்)..அப்போது அதற்கு நிகரான தண்ணீர் வெளியேறும்..

அதன் பிறகு யானையை கீழே இறக்கிவிட்டு அதற்கு நிகரான தங்கங்களை வைத்தனர். . இவ்வாறு நடந்தது துலாபார தானம்..

இப்போது சொல்லுங்கள், ஆர்கிமிடிஸ் கண்ட தத்துவத்தை முதன் முதலில் கண்டறிந்தவனும் செய்து காட்டியவனும் நமது முன்னோர்கள் தானே. நாம் ஆன்மீகம் வழியாக அறிவியலை வளர்த்துள்ளோம்..