நாம் வாழும் பூமியை இன்னும் இரண்டே நாட்களில் வேற்று கிரகம் ஒன்று மோதி உலக அழிவுக்கு வழிவகுக்கும் என்ற பரபரப்பு தகவல் உலகெங்கும் பரவி வருகிறது.
பூமியில் எதிர்வரும் 23 ஆம் திகதி மோதவிருக்கும் அந்த பெயரிடப்படாத கிரகமானது சில முக்கிய காரணிகளால் இதுவரை நாசா குழுவினரால் கூட கண்டுபிடிக்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது.
ஆனால் இந்த விடயம் உண்மையா என வினவுவோருக்கு வேதாகம வாக்கியங்களை மேற்கோள் காட்டுகின்றனர் குறித்த கோட்பாட்டாளர்கள்.
வேதாகமத்தின் வெளிப்பாடு புத்தகத்தில் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். இதேபோன்று வேதாகமத்தில் லூக்காவின் புத்தகத்தில் சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள சூரிய கிரகணம் அமெரிக்காவை உலுக்கும் உக்கிர புயல்கள் என அனைத்தும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாக கிறிஸ்தவ எண்ணியலாளர்கள் தெரிவிக்கின்றனர். மட்டுமின்றி செப்டம்பர் 23 ஆம் திகதியின் முக்கியத்துவம் குறித்து எகிப்தில் அமைந்துள்ள பிரமிடுகளில் குறித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வேதாகமத்தில் நிபுரு என அறியப்படும் மாய கிரகமானது தனது பயணத்தை பல நூறு ஆண்டுகளுக்கு முன்னமே துவங்கியுள்ளதாகவும், எதிர்வரும் 23 ஆம் திகதி அது பூமியுடன் மோதும் எனவும் சிலர் ஆணித்தரமாக நம்புகின்றனர்.
ஆனால் இவை அனைத்தையும் நாசா மறுத்துள்ளதுடன், நிபுரு என்ற பெயரில் கிரகம் இல்லை எனவும், அது வேதாகமத்தில் மட்டுமே உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
குறித்த கிரகம் தொடர்பில் 1976 ஆம் ஆண்டு முதன்முறையாக Zecharia Sitchin என்பவர் தனது புத்தகத்தில் விரிவாக பதிவு செய்துள்ளார்.
இதனையடுத்து கிறிஸ்தவ மத நம்பிக்கையாளர் David Meade, அந்த கிரகத்தை நிபுரு என பெயரிட்டு, அது பூமிக்கு நெருங்கும் காலகட்டத்தில் பாரிய நிலநடுக்கம், கடுமையான புயல், எரிமலை வெடிப்பு,
காட்டுத்தீ என பல அறிகுறிகள் தோன்றும் என தனது கட்டுரைகளில் எச்சரிக்கை விடுத்தார்.
இதற்கு அத்தாட்சியாக David Meade வேதாகமத்தின் வெளிப்பாடு புத்தகத்தில் உள்ள சில பகுதிகளை சுட்டிக்காட்டியுள்ளது மட்டுமின்றி, ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்கர்கள் இயற்கையின் பாரிய காட்சி ஒன்றை காண்பார்கள் என பல மாதங்களுக்கு முன்னர் குறிப்பிட்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 21 ஆம் திகதி சூரிய கிரகணம் ஏற்பட்டது. மட்டுமின்றி அதே நாளில் நிபுரு கிரகம் தனது பயணத்தின் முக்கிய பகுதியான சூரிய குடும்பத்தில் இணையும் எனவும் அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.