-
மேஷம்
மேஷம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நீண்ட நாட்க
ளாக பார்க்க நினைத்தவரை சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். சிறப்பான நாள். -
ரிஷபம்
ரிஷபம்: இன்றையதினம் மாறுபட்ட அணுகுமுறையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பிள்ளை களின் வருங்காலத் திட்டத் தில் ஒன்று நிறைவேறும். பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக் கும். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.
-
மிதுனம்
மிதுனம்: எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். பால்ய நண்பர்களால் ஆதாயம் உண்டு. அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங் களை முடிப்பீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். திடீர் திருப்பம் உண்டாகும் நாள்.
-
கடகம்
கடகம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற் கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அரசு காரியங் கள் சுலபமாக முடியும். திடீரென்று அறிமுகமாகுபவரால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். சவாலில் வெற்றி பெறும் நாள்.
-
சிம்மம்
சிம்மம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். பணப்புழக்கம் கணிசமாக உயரும்.விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர் கள். வியாபாரத்தில் வேலையாட்கள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். உத்யோ கத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். தடைகள் உடைபடும் நாள்.
-
கன்னி
கன்னி: பிற்பகல் மணி 1.28 வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் மனதில் இனம்புரியாத பயம் வந்து போகும். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தமடைவீர்கள். இரண் டாவது முயற்சியில் சில காரியங்கள் முடியும். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் ஓரளவு வேலைச்சுமை குறையும். மாலையிலிருந்து நிம்மதி கிட்டும் நாள்.
-
துலாம்
துலாம்: கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. பணப்பற்றாக்குறை யால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். திடீர் பயணங்கள் உண்டு. வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் விவாதம் வேண்டாம். பிற்பகல் மணி 1.28 முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.
-
விருச்சிகம்
விருச்சிகம்: தன்னம்பிக்கை யுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும் உதவி கேட்டு வருபவர் களுக்கு உங்களாலானவற்றை செய்து கொடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். புதிய திட்டங்கள் நிறைவேறும் நாள்.
-
தனுசு
தனுசு: சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளை யும் பயன்படுத்திக் கொள்வீர் கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார் கள். புது வேலை அமையும். நெருங்கியவர் களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். சாதிக்கும் நாள்.
-
மகரம்
மகரம்: வீரியத்தை விட்டு விட்டு காரியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். நேர்மறை எண்ணங்கள் தோன்றும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.
-
கும்பம்
கும்பம்: பிற்பகல் மணி 1.28 வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் முன்கோபத்தை குறையுங்கள். பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். யோகா, தியானம் என மனம் செல்லும். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். மாலைப் பொழுதிலிருந்து மகிழ்ச்சி தங்கும் நாள்.
-
மீனம்
மீனம்: கணவன்-மனைவிக் குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். புது நட்பு மலரும். தாய்வழி உறவினர்களால் உதவிகள் உண்டு. வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். பிற்பகல் மணி 1.28 முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் கவனம் தேவைப்படும் நாள்.