பிக்பாசில் இருந்து சென்றவுடன் வையாபுரி என்ன செய்தார் தெரியுமா?

பிக்பாசில் இருந்து கடந்த வாரம் நடிகர் வையாபுரி எலிமினேட் செய்யப்பட்டார். அவர் எலிமினேட் செய்யப்பட்டது அவரது குடும்பத்தினருக்கு தெரியாது. எனவே சனிக்கிழமை இரவு வீட்டிற்கு சென்று அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
இது குறித்து அவரது மனைவி கூறும்போது, அவர் எலிமினேட் ஆனது எங்களுக்கு தெரியாது. எனவே எங்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அவரை ஆரத்தி எடுத்து வரவேற்றோம்.

xasx

பின்னர் இரவு முழுவதும் பேசி கொண்டே இருந்தோம். பிக்பாஸ் வீட்டில் எல்லோருடனும் சிரித்து பேசி மகிழ்ச்சியுடன் இருந்த நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
அதே போல அங்குள்ளவர்களுக்கு உணவு சமைத்து கொடுத்ததை பற்றியும் கூறினார். ஏன் அவர்களுக்கு மட்டும்தான் சமைப்பீர்களா. எங்களுக்கு சமைத்து தர மாட்டீர்களா என கேட்டேன். உடனே என்ன வேண்டுமானலும் கேள் சமைத்து தருகிறேன் என்று கூறினார்.

மேலும் 84 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்ததில் அவர் ரொம்பவும் இளைத்து விட்டார். எனவே அவருக்கு பிடித்தமானதை சமைத்து போட உள்ளேன் என்றார்.
100 நாட்கள் இருந்து இருந்தால் சந்தோஷப்பட்டு இருப்போம். ஆனாலும் 100 நாளில் குடும்பத்துடன் சென்று வர அழைப்பு வந்துள்ளது. அன்று அங்கு சென்று எல்லோரையும் உற்சாகப்படுத்துவோம் என்றார்.