கனடாவில் சாதனை படைத்த இலங்கையர்..

இலங்கையை சேர்ந்த மாணவர் ஒருவர் கனடாவில் புதிய கண்டுபிடிப்பு ஒன்றை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளார்.

இலங்கையில் பிறந்த கருணாதிபதி லின் வீரா என்ற மாணவரே இந்த புதிய கண்டுபிடிப்புக்கு சொந்தக்காரர் ஆவார்.

டொரன்டோ Ryerson பல்கலைக்கழகத்தின் மூத்த மாணவரான கருணாதிபதி புதிய கண்டுபிடிப்புக்காக கனடாவில் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

2017 Contemporary-Modern Furniture Student Design போட்டியில் வெற்ற கருணாதிபதி கொளரவிக்கப்பட்டதுடன், 3000 டொலர் உதவித் தொகையும் வென்றுள்ளார்.
கடந்த 14ஆம் திகதி நியுயோர்க் வடிமைப்பு மத்திய நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கருணாதிபதி விருதினை பெற்றார்.

Cliff Young Ltd, சர்வதேச அலங்காரம் மற்றும் வடிவமைப்பு சங்கத்தின் கல்வி அறக்கட்டளையினால் அவருக்கு இந்த உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.
“முன்னணி வடிவமைப்பாளர்களின் அடுத்த தலைமுறைக்கு ஆதரவு கொடுப்பதற்கு களமாக அமைந்துள்ள இந்த அற்புதமான போட்டியை கௌரவிக்க நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம், என Cliff Young Ltd நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Leslie Young Zarra தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பிறந்த வெற்றியாளர் கருணாதிபதி லின் வீரா, அவரது உண்மையான வடிவமைப்பில் ஒரு கதாப்பாத்திரத்தை காட்டினார்.
இரு பிணைப்புகள் கொண்ட ஸ்டூல்கள் ஒரு மேசையை உருவாக்கும் என்பதே அவரின் வடிவமைப்பாகும்.

அந்த மேசை இலகுரக பாலிமரினால் தயாரிக்கப்பட்டுள்ளது. அதனை இலகுவாக எடுத்துச் செல்ல முடியும். ஒன்றினைத்து அதனை எளிதில் சுருக்கலாம்.
இது தொடர்பில் கருணாதிபதி லின் வீரா விளக்கமளித்ததனை போன்றே செய்து முடித்துள்ளார் என பாராட்டப்பட்டுள்ளது.

pa1
24 பல்கலைக்கழகங்களை சேர்ந்த 63 வடிவமைப்பாளர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்றனர். தங்களது பல்கலைக்கழக மூத்த மாணவரான கருணாதிபதி தெரிவு செய்யப்பட்டுள்ளமை பெருமையாக உள்ளதென பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.