இந்திய தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான கமல்ஹாசன், தமிழ் நாட்டு முதலமைச்சர் பதவி தொடர்பில் பெரிய கனவுடன் உள்ளார்.
இந்த நிலையில் அவர் செயற்பாட்டு அரசியலில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளதாக இந்திய ஊடகமொன்றுடன் இடம்பெற்ற செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.
எப்படியிருப்பினும் எதிர்வரும் நாட்களுக்குள் தான் அரசியல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீது கொண்ட மரியாதையின் காரணமாகவே தான் இதுவரை அரசியலில் நுழையவில்லை என அவர் கூறியுள்ளார்.
அவரால் தமிழ் நாட்டில் நிறைவேற்றப்பட்ட மக்கள் சேவை இன்று இல்லாமல் போயுள்ளது. தமிழ் நாட்டு மக்களுக்காக தலைமைத்துவம் வழங்க எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இலங்கை தமிழ் மக்கள் தொடர்பிலும் தான் கவனம் செலுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை தமிழ் மக்கள் தொடர்பில் ஏனைய அரசியல்வாதிகள் செயற்பட்ட முறைக்கு அப்பால் சென்று தான் செயற்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.