100 அகதிகளுடன் பயணித்த படகு லிபிய கடற்பரப்பில் மூழ்கியது !!

லிபிய  கடற்பரப்பில் 100 அகதிகளுடன் பயணித்த  படகு ஒன்று மூழ்கியுள்ளது.

nbmj

இதனையடுத்து  அதில் பயணித்த 50க்கும் அதிகமான அகதிகள் காணாமல் போய் இருப்பதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

லிபியாவின் மேற்கு நகரான, சப்ராதாவில் இருந்து கடந்த வாரம் தங்களின்பயணத்தை ஆரம்பித்த அகதிகளே இந்த அனர்த்தத்துக்கு முகம்கொடுத்துள்ளனர்.

30 பேர் வரையில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதுடன், 8 பேரின் சடலங்கள்  மீட்கப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது