ஏழை பாட்டியின் 300 ரூபாயை திருடிய வங்கி..!? : கண்களை கலங்க வைத்த பதிவு..!!

ஆலங்குளம் ஸ்டேட் பாங்க் வங்கியில் வரிசையில் ஒரு 75 வயது மதிக்கதக்க பாடியுடைய OAP கணக்கில் முதியோர் உதவித்தொகை பணம் 1000 ரூபாயில் குறைந்த பட்ச பேலன்ஸ் இல்லாத காரணத்தால் 350 ரூபாயை அபராதமாக பிடித்துக்கொண்டு மீதம் 650 ரூபாயை தருகிறார்கள்.

sdcs

அந்த பாட்டிக்கு 3000 ரூபாய் மினிமம் பேலன்ஸ் என்றால் என்னவென்றே கடைசி வரை புரியவில்லை,

இதெல்லாம் தெரியாத அந்த பாட்டி கண்ணீரோடு வெளியே போனதை பார்க்கும் போது மனதிற்கு மிகவும் வேதனையாக இருந்தது.

இது என்ன தேசம் படித்தவர்கள் எப்பொழுதுமே ஏதாவது ஒரு வகையில் இந்த தேசத்தை சுரண்டிக்கொண்டிருக்கிறார்கள்.

இவற்றையெல்லாம் வேடிக்கை பார்த்து கொண்டு நாம் எதுவும் செய்யாமல் இருக்கிறோம். நமக்கும் பிணங்களுக்கும் என்ன வித்தியாசம்

ஏழைகளின் ரத்தத்தை ருசி பார்க்கும்ஓநாய்கள் இவர்கள்.

பாட்டியின் சுருக்கு பையில் இருக்கும் பணத்தை திருடுவது தான் உங்கள் டிஜிட்டல் இந்தியாவா இது விபச்சாரத்தை விட கீழான செயல் அல்லவா..?

முகநூலில் ஒருவர் இவ்வாறு தன்னுடைய வேதனையை வெளிப்படுத்தியிருந்தார்.