முள்ளியவளை – களிக்காடு 11ஆம் கட்டை பகுதியில் யானை ஒன்று கிணற்றுக்குள் தவறி வீழ்ந்திருக்கின்றது . நேற்று, இரவு வேளையில் குறித்த யானை கிணற்றுக்குள் விழுந்திருக்கலாம் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
களிக்காடு ,கோடாலிக்கல்லு குஞ்சுக்கோடாலிக்கல்லு, பகுதிகளில் சுற்றித்திரிந்த அலியன் வகை யானையே இவ்வாறு கிணற்றுக்குள் விழுந்துள்ளது.
குறித்த யானையை மீட்பதற்கான நடவடிக்கையை வன ஜீவராசிகள் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.