கொழும்பை சூழவுள்ள பல பகுதிகளில் இன்று காலை மணல் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கொழும்பிலுள்ள உலக வர்த்தக மையம் மற்றும் காலி முகத்திடலை சுற்றியுள்ள பிரதேசங்களில் மணல் மழை பெய்துள்ளது.
காலை 9.30 மணிக்கும் 10.30 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இந்த மழை பெய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
திடீரென பெய்த மழை காரணமாக அந்தப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களின் மீது மணல் விழுந்துள்ளதனை அவதானிக்க முடிந்துள்ளது.
அணிந்திருந்த ஆடைகளில் மணல் விழுந்தமையினால், அந்தப் பகுதியில் சென்ற பலர் கடும் அசௌகரியத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.
இதுவொரு சாதாரண விடயமல்ல எனவும், இலங்கையில் இவ்வாறு அவதானிக்கப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவெனவும் அங்கிருந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.